சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பெயரில் போலி இணையதளங்கள்- பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

“சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பெயரில் பல போலி இணையதளங்கள் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் mfa.gov.sg என்பதை நினைவில் கொள்ளவும்.

“குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் இந்து மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்”- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!

இந்த போலி இணையதளங்களை முடக்கும் வகையில், சிங்கப்பூர் காவல்துறையினரின் உதவியுடன் பணியாற்றி வருகிறோம். சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய போலி இணையதளங்களைப் பார்வையிடவோ, தனிப்பட்ட (அல்லது) ரகசிய தகவல்களைப் பகிரவோ வேண்டாம்.

வேன்- கனரக வாகனம் மோதி விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அழைப்பு மையத்தின் 6379- 8000 என்ற தொலைபேசி எண்ணையோ (அல்லது) mfa@mfa.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்புக் கொள்ளலாம் என்று பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது