போலி இணையதளம் அறிவுறுத்திய மனிதவள அமைச்சகம்!

Photo: Ministry Of Manpower

 

சிங்கப்பூரில் மனிதவள அமைச்சகத்தின் பெயரில் போலி இணையதளம், மின்னஞ்சல் மோசடிகள், தொலைபேசி மோசடிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு மனிதவள அமைச்சகம் (Ministry Of Manpower- ‘MOM’) தொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும், போலி இணையதளத்தை எவ்வாறு கண்டறிவது? என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

 

போலி இணையதளங்கள் (Ministry Of Manpower- ‘MOM’), தொலைபேசி மோசடிகள் (அல்லது) மின்னஞ்சல் மோசடிகள் குறித்து எவ்வாறு புகாரளிப்பது?

‘1800 722 6688’ என்ற மோசடி எதிர்ப்பு (Anti- Scam) உதவி எண்ணை அழைக்க வேண்டும். இவை போலி இணையதளங்கள், மோசடி அழைப்புகள், மோசடி மின்னஞ்சல் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக இந்த உதவி எண்ணை அழைக்கலாம்.

 

போலி இணையதளங்கள் (அல்லது) ஃபிஷிங் இ- சேவையை (Phishing eServices) எவ்வாறு கண்டறிவது?

மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள முகவரி: https://www.mom.gov.sg ஆகும். இந்த இணைய தளத்தில் துறையைச் சார்ந்த தகவல்கள் மற்றும் இ-சேவைகள் இடம் பெறும். இந்த இணையதளம் மிகவும் பாதுகாப்பானது. உங்களின் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும்.

 

கண்டறியப்பட்ட சில போலி இணையதளங்கள் இதோ:

“http://www.mom-sg.org”
“http://mom-gov.com”
“http://ministryofmanpower.net”
“http://wponlinemomgov.sg.com”

 

தொலைபேசி மோசடிகள், மின்னஞ்சல் மோசடிகளை எவ்வாறு கண்டறிவது?

மோசடிகள் அவ்வப்போது தோன்றும். தங்களுக்கு வரும் எதிர்ப்பாராத அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களில் மனிதவள அமைச்சகத்தில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த மோசடி நபர்கள் உங்களிடம் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களையும் கேட்கலாம்.

 

மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண் 6438 5122 ஆகும்.