“87 வயது முதியவரைக் காணவில்லை”- தகவல் தரும்படி பொதுமக்களுக்கு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Facebook Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த சீன நாட்டைச் சேர்ந்த 87 வயதான முதியவரை இன்று (05/10/2022) காலை 07.23 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, டெம்பனீஸ் தெரு 23- க்கு (201E Tampines St 23) அருகில் இருந்துள்ளார். மஞ்சள் நிற போலோ சட்டையும், கருப்பு நிற ஷார்ட்ஷுடனும் அணிந்துள்ளார். இவரைப் பற்றிய தகவல் கிடைத்தாலோ, இவரை யாரேனும் பார்த்தாலோ உடனடியாக 999 என்ற சிங்கப்பூர் காவல்துறையினர் தொலைபேசி எண்ணை அழைக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Photo: Singapore Police Force Official Twitter Page

இந்த வாரம் எழுச்சியைக் கண்டுள்ள கோவிட் வழக்குகள் – இரண்டாவது பூஸ்டரை எடுக்குமாறு சுகாதார அமைச்சகம் பரிந்துரை !

அதேபோல், சீன நாட்டைச் சேர்ந்த 38 வயதான இளைஞரை அக்டோபர் 2- ஆம் தேதி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, Whampoa Dr என்ற இடத்தில் இருந்துள்ளார். அப்போது, சாம்பல் நிற ஷார்ட்ஸ் மற்றும் நீல நிற காலணியை அணிந்திருந்துள்ளார். இவரை பற்றி தகவல் கிடைத்தாலோ, யாரேனும் பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை அழைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது”. இவ்வாறு சிங்கப்பூர் காவல்துறையினர் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.