வந்திருக்கிறது ஜப்பானின் மிஸ்டர் டோனட் – ஜூரோங் பாயின்டில் அலைமோதிய கூட்டம் !

Mister donut

ஜப்பானில் பிரபலமடைந்த, அமெரிக்க டோனட் பிராண்ட் சிங்கப்பூரில் ஒரு மாத பாப்-அப்பிற்கு வாட்டென்ஷன் பிளாசாவில் மிஸ்டர் டோனட் ஆக வந்துள்ளது. இதனால் ஜூலை 15 அன்று ஜூரோங் பாயின்ட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 11 மணி முதல் கடை திறந்தாலும் முதல் வாடிக்கையாளர் கடை திறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக (9 மணி) வந்தார் என்று கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வரிசை நான்கு மணிநேரம் வரை சென்றதாகவும் 100 மீட்டருக்கும் நீளமான வரிசை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வரிசை நீளமாக இருந்ததால் இறுதியில் சிலர் வரிசையில் நிற்பதை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எவ்வளவு பேர் அங்கு நின்றனர் என்ற துல்லியமான எண்ணை வழங்க முடியவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

சராசரியாக, தினமும் 3,500 டோனட்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது, மேலும் அதன் தொடக்க நாளில் சுமார் 3,700 டோனட்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் காலையில் தலா 30 டோனட்களை வாங்க அனுமதிக்கப்பட்டிருந்தது, ஆனால் மதியம் ஒரு நபருக்கு அதிகபட்சமாக 10 டோனட்ஸ் என்ற வாங்கும் அளவு மாற்றப்பட்டது. இந்த வரம்பு சிறிது காலத்திற்கு தொடரும் என்றும் இதனால் அதிக மக்கள் டோனட்களை வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.