ஒரேயொரு ‘டச்’ போதும்! – தன் மொபைலே தனக்கு சோதனைக்கருவி! தொற்றை கண்டறியவரும் கண்டுபிடிப்பு!

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலின் போது ஒருவருக்கு பரிசோதனை செய்து பரிசோதனை முடிவுகளுக்காக அவர் காத்திருக்க வேண்டியிருந்தது.இது சுகாதாரத்துறை மற்றும் தனிநபர் ஆகிய இருதரப்புக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது.விரைவான ஆன்டிஜன் பரிசோதனைக் கருவி மூலம் எடுக்கப்படும் சோதனை முடிவுகளும் துல்லியமாக இல்லாததால் ஓரளவு மட்டுமே பரிந்துரைக்கப்பட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனின் உடல்நலனில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்ற ஆராய்ச்சியின் பரிமாணங்களில் ஒன்றாக சிங்கப்பூரில் புதிய கண்டுபிடிப்புக்கான முயற்சி நடந்து வருகிறது.

தொலைபேசி மூலம் கிருமித் தொற்றை கண்டறிய நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையத்தில் சாத்தியமாக்கப்பட்டது.எனவே, தொற்று ஏற்பட்டவர்களை எளிதாக அடையாளம் காணலாம்.IDMxS என்ற டிஜிட்டல் மூலக்கூறுப் பகுப்பாய்வு, அறிவியல் நிறுவனத்தில் 160 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அவற்றில் பெருந்தொகையை கல்வி அமைச்சகம் வழங்கியது.கொசுக்கள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய்களையும் கண்டறியலாம்.முதல்கட்டமாக முடிவுகளை உடனுக்குடன் காட்டும் ரத்த மாதிரிச் சோதனைக் கருவிகளை உருவாக்குகிறது.

ஆய்வுக்கூடத்தில் 100 முழுநேர ஆய்வாளர்களும் ஊழியர்களும் வேலைக்குச் சேர்க்கப்படுவர். இதன் மூலம் கண்டுபிடிப்பை விரைவில் உலகப் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.