சிறப்பு திறன் கொண்ட COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவாதம் ஏற்படுமா? – MOH விளக்கம்

Pic: Reuters

சிங்கப்பூரில் இருவகை சிறப்பு திறன் கொண்ட COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவாதம் உண்டாகும் அபாயம் அதிகரித்து இருப்பதாக எந்த தகவலும் இல்லை என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

அது தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவலிலும் எந்த உண்மையும் இல்லை என்பதை அமைச்சகம் சுட்டிக்காட்டி கூறியுள்ளது.

அதாவது Moderna, Pfizer-BioNTech/Comirnaty வகை தடுப்பூசிகளுக்கும் அமைச்சகத்தின் அந்த கருத்து பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது.

முன்னர் சிங்கப்பூரில் போடப்பட்ட தடுப்பூசிகளை போலவே இந்த வகை தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு முற்றிலும் பாதுகாப்பை வழங்கும் என்பதை MOH உறுதி செய்துள்ளது.

ஆகவே, அந்த தடுப்பூசிகளால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மிக மிக குறைவு என்பதை அமைச்சகம் சொன்னது.

கடும் நோய்வாய்ப்படுவதில் இருந்து காத்துக்கொள்ள இந்த வகை தடுப்பூசி முற்றிலும் உதவும் என்றும் MOH கூறியுள்ளது.