சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று… மீண்டும் தடுப்பூசி – ஏற்கனவே 4,000 பேர் போட்டாங்க

Moderna/Spikevax vaccine jabs
Photo: TODAY

சிங்கப்பூரில் புதிதாக வந்துள்ள சிறப்புத் திறன் கொண்ட Moderna/Spikevax தடுப்பூசிகளை சுமார் 4,200 பேர் போட்டுக்கொண்டதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களில் யார் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடையவர்களோ அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு திரு ஓங் நினைவூட்டினார்.

சிங்கப்பூரில் மீண்டும் முகக்கவசம், கட்டுப்பாடா? – சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

Moderna/Spikevax தடுப்பூசி தகுதிகள்

நீங்கள் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, மூன்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர் என்றால்..

நீங்கள் 50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து, கடைசி தடுப்பூசி போட்டு ஐந்து மாதங்களுக்கும் மேலாக இருந்தால்..

Moderna bivalent தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள கூட்டு சோதனை மற்றும் தடுப்பூசி நிலையத்திற்கு செல்லலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் என்னுடைய தடுப்பூசியை போட்டுக்கொண்டேன்…” இது பக்க விளைவுகள் ஏதும் இல்லாதது” என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசியே முதற்கட்ட பாதுகாப்பு என்பதையும் அவர் விளக்கி கூறினார்.