அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பங்கேற்ற சந்திப்பு – முகநூல் பதிவிட்ட பிரதமர் லீ

PM Lee Ramadan Tamil Puthandu
(PHOTO: MCI)

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் அழைப்பை ஏற்று மலேசியாவின் துணை மாமன்னரும் பேராக் சுல்தானுமான சுல்தான் நஸ்ரின் ஷா சிங்கப்பூர் வந்திருக்கிறார்.இங்கு இருக்கும் அவர் சிங்கப்பூர் தலைவர்களைச் சந்திப்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

நேற்று சுல்தான் நஸ்ரின்,வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ,பேராக் இஸ்லாமிய சமய,மலாய் பாரம்பரிய மன்றத்தின் தலைவர் முகம்மது அன்வர் சைனி ஆகியோருடனான சந்திப்பில் பிரதமர் லீ கலந்துரையாடினார்.

உரையாடலின்போது எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படத்தை பிரதமர் லீ தனது முகநூல் பதிவில் வெளியிட்டார்.மேலும் தனது முகநூல் பதிவில்,’மலேசியாவின் துணை மாமன்னரும் பேராக் சுல்தானுமான நஸ்ரின் ஷாவுடன் தேநீர் விருந்தில் கலந்துகொண்டு,இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வளர்த்துகொண்டோம்’ என்று குறிப்பிட்டார்.2019-ஆம் ஆண்டு சுல்தான் நஸ்ரின் சிங்கப்பூருக்கு வந்த போது அவரைத் தான் சந்தித்ததாக பிரதமர் லீ நினைவு கூர்ந்தார்.

சிங்கப்பூர் வந்துள்ள சுல்தானுக்கு சிங்கப்பூரின் பசுமைத் திட்டம் 2030 பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது.பேராக் உட்பட மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் வலுவான உறவை பலப்படுத்த தான் விரும்புவதாகவும் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சந்திப்பின்போது நடைபெற்ற விவாதம் பற்றிய விவரங்களை பிரதமர் வெளியிட்டார்.சிங்கப்பூரும் பேராக் மாநிலமும் ஒத்துழைப்பை பலப்படுத்தக்கூடிய துறைகள் மற்றும் வட்டார நிலவரங்கள் பற்றியும் தாங்கள் விவாதித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

நாடுகளுக்கிடையேயான எல்லைகள் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டதால் ,இப்போது நேருக்கு நேர் சந்திக்க முடிந்தது மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார் .