சிங்டெல்- மனிதவள அமைச்சகம் இணைந்து நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான ஓவியப் போட்டி!

Photo: Singtel Official Facebook Page

 

சிங்கப்பூரில் முன்னணியில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று சிங்டெல் (Singtel). தேசிய தினத்தையொட்டி இந்நிறுவனம், சிங்கப்பூரை உருவாக்க உதவிய வெளிநாட்டு தொழிலாளர்களுடன் நாட்டின் வளர்ச்சியையும், சாதனைகளையும் கொண்டாட முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து, மனிதவள அமைச்சகத்தின் (Ministry Of Manpower) கீழ் உள்ள ‘ACE’ குழுமத்துடன் இணைந்து ‘தேசிய தின பிறந்தநாள்’ என்ற தலைப்பில் ஓவியப் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.

சிங்கப்பூர் எல்லா சவால்களையும் ஒற்றுமையாக நின்று எதிர்கொள்ளும் – பிரதமர் திரு லீ நம்பிக்கை!

இதில் பெறப்பட்ட 800- க்கும் மேற்பட்ட ஓவியங்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பலர் “சிங்கப்பூர் பாதுகாப்பான மற்றும் அற்புதமான இடமாக இருக்கும் மற்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் வளமாக இருக்கும்” என்று நம்புவதுவாக சுதர்சன் உள்ளிட்ட தொழிலாளர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மற்றவர்கள் தொற்றுநோய்களின் போது தங்களைக் கவனித்துக் கொண்ட சிங்கப்பூரர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்க உதவும் நோக்கத்துடன், மிகவும் சிறந்த படைப்புக்கு சிங்டெல் (Singtel) நிறுவனம் ஆனது ஒரு புதிய ஸ்மார்ட்ஃபோனை வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் 60 GB | 1000 IDD நிமிடங்கள் உள்ளிட்ட சிங்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.