சிங்கப்பூரில் உயரத்திலிருந்து விழுந்தும், வாகன விபத்திலும் ஊழியர்கள் பலி – பாதுகாப்பு முக்கியம்…மீறினால் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க தடை

mom-higher-rate-workplace-deaths-first-half-2022
(PHOTO: Roslan Rahman/ Getty Image)

சிங்கப்பூரில் இந்த 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேலையிட உயிரிழப்புகள் அதிகம் பதிவாகியுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

இருப்பினும், வேலையிடத்தில் ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கை குறைவு என்றும் MOM இன்று வெள்ளிக்கிழமை (செப் 16) கூறியது.

சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனி அதிக கட்டணம்!

சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் 28 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளன, இது 6 மாத அடிப்படையில் இறப்பு விகிதம் 100,000 ஊழியர்களுக்கு 0.8 என கொண்டு வந்துள்ளது.

இதே நிலவரம் கடந்த 2021 ஆம் ஆண்டில் முற்பாதியில் 0.7 விகிதம் எனவும், பிற்பாதியில் 0.4 விகிதம் எனவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான 28 இறப்புகளில் பாதி பேர் மேலே உயரத்திலிருந்து விழுந்தும், வாகன விபத்திலும் சம்மந்தப்பட்டு இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இதனால் முழு பாதுகாப்பு நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஊழியர் விழுந்தது தொடர்பில் நிறுவனம் ஒன்றிற்கு வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க 3 மாதங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

ஆப்பிள் iPhone 14 விற்பனை ஆரம்பம்: சிங்கப்பூரில் இரவு முதலே கடை வாசலில் தங்கிய கூட்டம்