வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஒருவேளை உணவு மட்டும் வழங்கிய விவகாரம்; சிங்கப்பூர் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் விசாரணை..!!

Social media post of an FDW who claimed her employer only gave her one meal a day, MOM is investigating about that matter

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ஒரு பதிவு இந்தோனேசியா Indramayu பணிப்பெண்ணுக்கு ஒருவேளை உணவு மட்டும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து, சிங்கப்பூர் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த பதிவில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு பணிப்பெண் தற்போது தூதரகத்தில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கூறுகையில், பணியாட்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவது ஒவ்வொரு முதலாளிகளுக்கும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்தும் விதமாக தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்று சிக்கல்களை எதிர்கொள்ளும் போது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி அமைச்சகம் உதவி எண் வழங்கியுள்ளது.

உதவி எண்: 1800 339 5505