சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ, அதனால் இறந்தாலோ நிறுவனங்கள் தான் பொறுப்பு – MOM அதிரடி அறிவிப்பு

Work permit foreign workers Construction company
Pic: Today/File

சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வேலையிட பாதுகாப்பு குறித்த நடைமுறை நெறிமுறையை இன்று திங்கட்கிழமை (செப். 19) அறிமுகப்படுத்தினார்.

வேலையிட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம் ஆகியவை தொடர்பாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களின் கடமைகளை அந்த நெறிமுறை விவரிக்கிறது.

கோர விபத்தில் சிக்கி ஆடவர் பலி… கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக டிரைவர் கைது

குறிப்பாக, வேலையின்போது ஏற்படும் விபத்துகளுக்கும் அவர்களுக்கே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் அது வலுப்படுத்துகிறது.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் இதற்கான அரசிதழில் வெளியிடப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் நடந்தால், ​​நீதிமன்றங்கள் அதன் தீர்ப்பில் பாதுகாப்பு நடைமுறை நெறிமுறைக்கு இணங்குவதைக் கருத்தில் கொள்ளும். இதனால் பொறுப்பாளிகளான நிறுவனங்களுக்கே தண்டனை வழங்கப்படும்.

2022ஆம் ஆண்டில் இதுவரை 37 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் 2021 ஆம் ஆண்டு முழுவதிலும் இதே எண்ணிக்கைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துகளில் பெரும்பாலானவை பாதுகாப்பு குறைபாடுகள், போதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அல்லது பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காதது போன்ற காரணங்களால் ஏற்பட்டதாக டாக்டர் டான் கூறினார்.

ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்