மூப்படையும் தொழிலாளர்களுக்கு அவசியமான வழிகாட்டி இதுதான் – சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் வெளியிட்ட புத்தகம்

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்
MOM

சிங்கப்பூரில் மூப்படையும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வாழ்க்கைத் தொழில் திட்டமிடலைச் சிரமமின்றி செய்வதற்கு முதலாளிகள் புதிய வழிகாட்டி புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சிக்கலின்றி வாழ்க்கைத் தொழில் தொடர்பான திட்டமிடலைச் செய்வதற்கு தொழிலாளர்கள் இந்த புத்தகத்தை நாடலாம்.(The Structured Career Planning Guidebook) நேற்று வெளியிடப்பட்டது.

திறன்மேம்பாடு,வாழ்க்கைத் தொழில் ஆகியவற்றில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் செயல்முறையை நடைமுறைக்குக் கொண்டுவரும் ஒரு கட்டமைப்பை முதலாளிகள் இந்த வழிகாட்டிப் புத்தகம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.மூப்படையும் தொழிலாளர்களுக்கு இந்த புத்தகம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது சிங்கப்பூரில் 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் 25 சதவீதம் இருக்கும் நிலையில் மேலும் நீண்ட காலம் நீடிக்கக் கூடிய வாழ்க்கைத் தொழில்களுக்கு மூத்தோர் தயாராக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் தெரிவித்தார்.மூப்படையும் தொழிலாலரணிக்கு இந்தத் திட்டம் அவசியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழிகாட்டிப் புத்தகத்தை மனிதவள அமைச்சகமும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் அமைப்பும் இணைந்து நேற்று வெளியிட்டுள்ளது.தொழிலாளர் ஒருவர் ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்துவது உண்மையான சவால் அல்ல.தொழில்துறை தேவைகளுக்கேற்ப தொழிலாளர்கள் இருப்பதை உறுதி செய்வதே உண்மையான சவால் என்று அமைச்சர் கோ கூறினார்.