சிங்கப்பூரின் மரினா பே கால்வாயில் மிதந்த பணம் – வைரலான வீடியோ !

money floats in marinabaysands singapore sea dam

சிங்கப்பூரின் மரினா பே சாண்ட்ஸ் அருகே பல S$50 நோட்டுகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.டிக்டோக்கில் ஜூலை 27 அன்று தண்ணீரில் பணம் மிதக்கும் வீடியோ வெளியானது.தண்ணீரில் மிதந்த நனைந்த நோட்டுகள் தற்செயலாக வீசப்பட்டதாக நம்பப்பட்டது.நீரின் மேற்பரப்பில் மிதந்த குப்பைகளின் பல துண்டுகளை கேமராவில் பெரிதாக்கிய பின்பு மிதந்தவைகள் அனைத்தும் S$50 நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

 

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஃபெங் சுய் மாஸ்டர் அல்லது ஜியோமேன்ஸர் ஒருவருக்கு அந்த ஈரமான பணம் சொந்தமானது என்று கூறப்படுகிறது.அவரது பணம் கிளிப் வாலட்டில் இருந்ததால் பணம் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.தொலைபேசியில் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த நபர் அவரது பணம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதையும் கவனிக்கவில்லை.

 

வீடியோவிற்கு பல்வேறு கருத்துகளைப் பதிவிட்ட வர்ணனையாளர்கள்,பணம் பறந்து சென்ற சமயத்தில் அவர்கள் இருந்திருந்தால் பணத்தை மீட்டெடுப்பதற்காக தண்ணீருக்குள் குதித்திருப்பார்கள் என்று கூறினர்.அதாவது பணத்தை தவறவிட்டவர் அதை மீட்டெடுக்க முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

 

மரினா பே சான்ட்ஸ் அருகே பணத்தை தவறவிட்டிருந்தால்,மெரினா விரிகுடா பகுதியிலும், பின்னர் சிங்கப்பூரின் 15வது மற்றும் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மெரினா நீர்த்தேக்கத்திலும் மிதக்கும் வாய்ப்புள்ளது.இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு வரும் உபரி நீர் கடைசியில் திறந்த கடலில் விடப்படுகிறது.மெரினா கால்வாயின் அணையில் பணம் உட்பட எந்த குப்பைகளையும் சிக்க வைப்பதன் மூலம் பணத்தை மீட்டெடுக்கலாம்.