9.23 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மோசடி: 334 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை!

New Upper Changi Road motorcyclist dies
Photo: SPF

 

சிங்கப்பூரில் பண மோசடி போன்ற குற்றச் சம்வங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

 

அந்த வகையில் 9.23 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூர் டாலர் பணம் மோசடி செய்யப்பட்டதன் புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூன் 19- ஆம் தேதி முதல் ஜூலை 2- ஆம் தேதி வரை இரண்டு வாரங்கள் சிங்கப்பூரில் உள்ள தீவு முழுவதும் வர்த்தக விவகாரங்களுக்கான பிரிவு மற்றும் ஏழு காவல்துறை பிரிவைச் சேர்ந்தவர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 

அப்போது, சந்தேகத்தின் பேரில் 14 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட 225 ஆண்கள், 109 பெண்கள் என மொத்தம் 334 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 14 வயது மட்டுமே நிரம்பியர் ஆவர்.

 

இவர்கள் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நுட்ப உதவி, அரசாங்க அதிகாரிகள், சீன அதிகாரிகள் போல ஆள் மாறாட்டம் செய்து போலி மின்னஞ்சல் அனுப்பியவர்கள், இணைய தளத்தில் காதல் வலை விரித்தவர்கள் ஆகியவற்றுடன் மின் வர்த்தகம், முதலீடு, வேலைகள், கடன், போலி சூதாட்டத் தளங்கள் தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

மோசடி செய்தப் பணத்தை கள்ளத்தனமான முறையில் நல்ல பணமாக மாற்ற உதவியது யார்? உள்ளிட்டவைக் குறித்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பண மோசடிகள் உள்ளிட்ட 872 சம்பவங்களை விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் மோசடி செய்தவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். அதேபோல், லஞ்ச ஊழல், போதைப் பொருள் கடத்தல், இதர கடும் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ், மோசடி பணத்தை கள்ளத்தனமான முறையில் நல்ல பணமாக மாற்றியவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை (அல்லது) 5,00,000 அபராதம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

 

பண மோசடி தொடர்பாக, பொதுமக்களிடம் சிங்கப்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.