வீட்டுல யாருப்பா இருக்கீங்க.. அழையா விருந்தாளியாக வந்த “ராட்சத உடும்பு” – சிதறி ஓடிய மக்கள்

monitor-lizard-bedok-hdb
Jiten

பெடோக் நார்த் ரோடு, பிளாக் 428 இல் வசிக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடந்தது.

அழையா விருந்தாளியை போல பெரிய உடும்பு ஒன்று அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்றதை கண்ட மக்கள் அச்சத்தில் சிதறினர்.

நேற்று (மே 24) காலை இந்த சம்பவம் நடந்ததாகவும், ஜித்தன் என்பவர் அதன் படங்களை மதர்ஷிப்க்கு அனுப்பியுள்ளார்.

வேலையிடத்தில் புதிய நடைமுறை.. மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை – அக். முதல் அமல்

ஜித்தன் அது பற்றி கூறும்போது; “சுமார் 1.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த உடும்பு , தரை தளத்தில் இருந்து அதிவிரைவாக மேலே சென்றது” என்றார்.

அதாவது அது HDB பிளாக்கின் மூன்றாவது மாடிக்கு ஏறியதாக அவர் கூறியுள்ளார்.

குடியிருப்பாளர்கள் அதனை கடந்து மிரண்டுபோய் சத்தம் போட்டதாகவும், மேலும் அதனை நோக்கி துடைப்பங்களை காட்டியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஜித்தன் தேசியப் பூங்காக் கழகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் வெளியாகவில்லை.

இதுபோன்ற பெரிய உடும்புகளை கண்டால் அதனை எதுவும் வேண்டாம், தன்னை பாதுகாக்க அது உங்களை தாக்க நேரிடும். எனவே, தேசிய பூங்கா கழகத்துக்கு தகவல் கொடுங்கள்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரி, டாக்சி மோதி கடும் விபத்து: ஊழியர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி