கழுத்தில் கேபிளுடன் ஆபத்தான நிலையில் உடும்பு…”உதவுவது நம் பொறுப்பு” – சிங்கப்பூர் வைரல்

monitor-lizard-neck
Loke Peng Fai

கழுத்தில் கேபிள் கட்டிய நிலையில் காணப்படும் உடும்பு ஒன்றின் படம் இயற்கை உயிரினங்கள் குழுக்களில் பரவி வருகிறது.

பேஸ்புக் பயனர் Loke Peng Fai என்பவர், கடந்த ஜனவரி 16 அன்று காலை Sungei Buloh Wetland Reserve இல் அதனை புகைப்படம் எடுத்தார்.

சிங்கப்பூரில் 3 நாட்களாக காணாமல் போன மலேசிய இளம்பெண்… ஆற்றில் சடலமாக மிதப்பு – என்ன நடந்தது?

பின்னர், அவர் வீட்டிற்கு வந்து புகைபடங்களைப் பார்த்தபோதுதான் அதன் அவலநிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

“Singapore Wildlife Sightings” என்ற பேஸ்புக் குழுவில் படத்தைப் பகிர்ந்துள்ள Loke, புகைப்படம் எடுத்த பிறகு அது தண்ணீரில் காணாமல் போனதாகக் கூறினார்.

அந்த உடும்பு வாயில் ஒரு பெரிய மீன் இருப்பதை புகைப்படம் மூலம் காணமுடிகிறது.

இது குப்பைகளால் ஏற்படும் பிரச்சினை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதன் கழுத்தில் கேபிள் எப்படி வந்தது என்று ஊகங்களைத் தவிர்க்குமாறு குழு உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மாறாக அதற்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறியுள்ளார் அவர்.

அதிசயம் கண்டிப்பா நடக்கும் என நம்பி இருக்கும் அக்கா… சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு மரண தண்டனை ரத்தாகுமா?