“உடும்பு vs கடும் விஷமுள்ள நாகப்பாம்பு” – சிங்கப்பூர் வைரல்..!

Monitor lizard & venomous snake at Pasir Ris Park
William Khaw/Singapore Wildlife Sightings

சில நேரங்களில் நமது கேமராவில், விசித்திரமான செயல்களைச் செய்யும் காட்டு விலங்குகள் பிடிபடும்.

தற்போது இதுபோன்ற ஒரு வித்தியாசமான காட்சி தான் சிங்கப்பூரில் கேமராவில் பிடிபட்டுள்ளது.

ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகள்… வெளிநாட்டவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை

புகைப்படக் கலைஞர் வில்லியம் காவ் என்பவர் இரண்டு ஊர்வன உயிரினத்துக்கு இடையேயான இதுபோன்ற காட்சியைப் படம்பிடித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 22, 2021 அன்று Singapore Wildlife Sightings என்ற Facebook குழுவில் அதனை அவர் பகிர்ந்துள்ளார்.

William Khaw/Singapore Wildlife Sightings.
William Khaw

பாசிர் ரிஸ் பூங்காவில் உடும்பு மற்றும் நாகப்பாம்பின் விசித்திர சந்திப்பை காவ் கண்டுள்ளார். இரண்டும் கிட்டத்தட்ட தங்கள் பிளவுபட்ட நாக்கைத் தொட்ட சரியான தருணத்தை அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இது இணைய வாசிகளிடையே அதிசயமாக பார்க்கபடுகிறது. பலர் இதனை இதுக்கு முன்னர் கண்டதில்லை என்றும் கூறி வருகின்றனர்.

Equatorial spitting cobra என்னும் அந்த நாகப்பாம்பு, சிங்கப்பூர் முழுவதிலும் காணப்படும் விஷமுள்ள சிங்கப்பூர் இனமாகும்.

விடுதியில் தகராறு: இறந்த தன் தாயை அவமானப்படுத்திய வெளிநாட்டு ஊழியரை குழவி கல்லால் தாக்கிய சக ஊழியருக்கு சிறை