சிங்கப்பூரில் மேலும் குரங்கம்மை தொற்று பாதிப்பு – பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டவர்

monkeypox local singapore

சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் மேலும் ஒரு குரங்கம்மை தொற்று பதிவானதை உறுதி செய்துள்ளது சுகாதார அமைச்சகம் (MOH).

அவர் சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயதான பிரிட்டிஷ் நாட்டவர் ஆவார். புதன்கிழமை அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் வேலையில் உள்ள தமிழ் ஊழியர்… சொந்த வீட்டில் நடந்த கொடுமை – சோகத்தில் குடும்பம்

தற்போது அவர் தொற்று நோய் தடுப்பு தேசிய நிலையத்தில் (NCID) சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது உடல்நிலை நன்றாக உள்ளது என்று MOH தெரிவித்துள்ளது.

அந்த ஆடவரும் கடந்த ஜூலை 6 ஆம் தேதி உடலில் நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டன, அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11 அன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

பின்னர் ஜூலை 13 அன்று அவர் மருத்துவமனைக்கு சென்றார், அதனை தொடர்ந்து அதே நாளில் NCID-யில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்புகள் தடமறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட சம்பவத்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் MOH விளக்கியுள்ளது.

அடுத்தது சிங்கப்பூர் தான் ! – இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இடம் தேடி அலையும் அவலம்