சிங்கப்பூருக்கு வந்திருக்கும் புதிய நோய்த்தொற்று, 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சகமான MOH, ஜூன் 21 அன்று சிங்கப்பூரில் குரங்கு அம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் 13 நெருங்கிய தொடர்புகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளது.
நோயாளியான 42 வயதான பிரிட்டிஷ் விமானப் பணியாளர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையமான NCIDயில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜூன் 15 முதல் 17 வரை சிங்கப்பூரில் இருந்த அவர், ஜூன் 19ஆம் தேதி மீண்டும் நாட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் ஜூன் 20ஆம் தேதி அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலில் ஜூன் 14 அன்று தலைவலியால் அவதிப்பட்டுள்ளார், பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு காய்ச்சலும் வந்துள்ளது. அனால் இந்த அறிகுறிகள் சரியாகின. இருப்பினும், அவருக்கு ஜூன் 19 அன்று தோலில் வெடிப்புகள் தென்பட்டன. இதனால் அவர் டெலி-கன்சல்டேஷன் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். மேல்சிகிச்சைக்காக ஜூன் 20 அன்று அவர் NCID க்கு அனுப்பப்பட்டுள்ளார்.

CONTACT TRACING எனப்படும் தொடர்புகளை தடமறியும் பனி நடந்து வருவதாகவும், ஜூன் 21 வரை 13 நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் MOH பகிர்ந்துள்ளது. இவரை கடைசியாகத் தொடர்பு கொண்டதில் இருந்து, நெருங்கிய தொடர்புகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவர் என்றும் MOH கூறியுள்ளது. குறைந்த ஆபத்துள்ள இரண்டு தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் விமானப்பணியாளருடன் கடைசியாகத் தொடர்பு கொண்டதிலிருந்து 21 நாட்களுக்கு தொலைபேசி கண்காணிப்பில் வைக்கப்பட்டு, மேலும் அறிகுறிகள் தோன்றுவதைக் கண்காணிக்க தினசரி தொலைபேசி அழைப்புகளைப் பெறுவார்கள் என்றும் MOH கூறியுள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டால், மேலும் பரவுவதைத் தடுக்க, அவர்களைத் தனிமைப்படுத்த NCID க்கு அனுப்பப்படுவார்கள் என்றும் MOH கூறியுள்ளது.