கோவிட்-19 போல பெரியளவில் பாதிப்பு இல்லாததால், குரங்கம்மைக்கு பெரியளவில் தடுப்பூசி தேவையில்லை – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு !

monkeypox vaccine singapore

குரங்கம்மைக்கு எதிராக சிங்கப்பூர் மக்கள் பெருமளவில் தடுப்பூசி போட சுகாதார அமைச்சகம் (MOH) பரிந்துரைக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இதற்குக் காரணம் இது தானாகவே கட்டுப்படும் தன்மையை கொண்டிருப்பது தான் என்றும் இதற்கான தடுப்பூசிகளின் நன்மைகள் அதன் அபாயங்களை விட அதிகமாக இல்லை என்றும் ஓங் கூறியுள்ளார்.

இதுவரை சிங்கப்பூரில் நான்கு வெளியூர் குரங்கம்மை வழக்குகளும் நான்கு உள்ளூர் வழக்குகளும் பதிவாகியுள்ளன என ஒங் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் அவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு தொற்றுநோயைப் பரப்பியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஓங் கூறியுள்ளார்.

2020 இல் கோவிட்-19க்கு செய்ததைப் போலவே, உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைக்கும் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்ததை சுட்டிக்காட்டிய ஓங் MOH தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று கூறியுள்ளார்.