மேலும் மூன்று புதிய பேருந்து நிறுத்தங்கள்- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd Official Facebook Page

சிங்கப்பூரில் பொதுபோக்குவரத்து சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்று எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம். இந்த நிறுவனம் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தின் பேருந்து மற்றும் ரயில் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூரில் மேலும் 370 கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இந்த நிலையில், புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான அறிவிப்பை எஸ்பிஎஸ் டிரான்ஸிட் (SBS Transit) நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 20 எண் கொண்ட பேருந்து சேவையானது (Service 20) தெம்பனீஸ் பேருந்து நிலையத்தில் (Tampines Bus Interchange) இருந்து சாங்கி பிஸினஸ் பார்க் அவன்யூ 3 (Changi Business Park Ave 3) வரை சாங்கி பிஸினஸ் பார்க் விஸ்டா சாலை (Changi Business Park Vista) வழியாக சேவை வழங்கப்படும். இச்சாலைக்கு இடையில் ஒரு புதிய பேருந்து நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்து நிறுத்தத்தின் பெயர் ‘Aft Changi Biz Pk Cres’ ஆகும். புதிய பேருந்து நிறுத்தத்தின் குறியீடு (Bus Stop Code) 96391 ஆகும். புதிய பேருந்து நிறுத்தம் வரும் டிசம்பர் 26- ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும்.

35 என்ற எண் கொண்ட பேருந்து (Service 35) சேவையானது ஏவியேஷன் பார்க் சாலையில் (Aviation Park Road) இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இச்சாலையில் எதிர் எதிரே இரண்டு புறமும் புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாலையின் வலது புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் பெயர் ‘Bef Changi Coast Road’ ஆகும். இதன் பேருந்து நிறுத்த குறியீடு (Bus Stop Code) 96471 ஆகும்.

ஆசியான்- ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

அதேபோல், சாலையின் இடதுபுறத்தில் ‘Aft Changi Coast Road’ என்ற மற்றொரு புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பேருந்து நிறுத்த குறியீடு (Bus Stop Code) 96479 ஆகும். இந்த இரண்டு புதிய பேருந்து நிறுத்தங்களும் வரும் டிசம்பர் 26- ஆம் தேதி அன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த வழித்தடத்தில் 35 என்ற எண் கொண்ட பேருந்து சேவையை வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 1800-287-2727 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) www.sbstransit.com.sg என்ற இணையதளத்தை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.