புனித திருநாள் ரமலான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் இஸ்லாமியர்கள் – சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படும் ரமலான் மிகவும் சிறப்பு வாய்ந்தது

Jail, fine for last of three brothers who illegally employed foreign workers at fairs

இஸ்லாமியர்களின் இன்பத் திருநாளான ரம்ஜானை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் பண்டிகையை கொண்டாட தொழுகை,நோன்பு போன்றவற்றை முறையாக கடைபிடித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இஸ்லாமியர்கள் பண்டிகையைக் கொண்டாட முடியும். இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் Masagos Zulkifli , சமூகத்தின் ஒழுக்கம் ,பின்னடைவு மற்றும் சிங்கப்பூரர்களின் உயிர்களைப் பாதுகாக்க உதவிய அனைத்து தியாகங்களுக்கும் நன்றி என்று கூறினார்.

கடந்த ஆண்டு Covid-19 கட்டுப்பாடுகள் காரணமாக ரமலான் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவாக இருந்தது. தற்பொழுது சிங்கப்பூரில் Covid-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு ஈகைத் திருநாள் சிறப்பு வாய்ந்தது என்று உள்ளூர் இஸ்லாமிய சமூகத்திற்கு திங்கள் கிழமை அன்று செய்தியில் தெரிவித்தார்.

மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்கு அதிகமான கூட்டங்களுக்கு இடமளிக்க முடிந்தது. Covid-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட காரணத்தால் குர்ஆன் ஓதுதல் ,மத விரிவுரைகள் மற்றும் தொழுகைகள் போன்ற நடவடிக்கைகளில் அதிக அளவிலான இஸ்லாமியர்கள் பங்கேற்க முடியும்.

இஸ்லாமியர்களுக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியான மற்றும் ஏக்கமான அம்சமாக இருக்கும் ரமலான் சந்தைகளின் வருகைக்காக பலர் ஆரவாரம் செய்தனர். புனித ரமலான் திருநாள் மாதத்தில் மசூதிகளில் ஒவ்வொரு இரவும் தாரவிஹ் தொழுகைகள் நடைபெறும். Covid-19 தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரமலான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடும் முதல் ஆண்டு இதுவாகும்.

கடந்த ஆண்டு கடுமையான covid-19 கட்டுப்பாடுகளிலும் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.ஐந்து பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து சமூக கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு சமூக கூட்டங்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்