சென்னை,கொச்சி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானச்சேவை – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்த நகரங்களின் விவரங்கள்

COVID-19: Special flight from Chennai to Singapore
COVID-19: Special flight from Chennai to Singapore

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்தியாவிற்கு கூடுதல் விமானச் சேவைகளை வழங்கவிருக்கிறது.சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையே வாரத்திற்கு 17 விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்க உள்ளது.

தற்போது வாரத்திற்கு 10 விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன.இந்தியாவிலிருந்து அதிகளவிலான பயணிகள் சிங்கப்பூருக்கு பயணிக்கின்றனர்.எனவே,விமானச் சேவைகள் அதிகரிக்கபடவிருக்கின்றன.

சிங்கப்பூருக்கும் கொச்சிக்கும் இடையே தற்போது வாரத்திற்கு ஏழு சேவைகள் செயல்படுகின்றன.இது இருமடங்காக அதிகரிக்கப்பட்டு 14 விமான சேவைகள் வழங்கப்படவிருக்கின்றன.

அடுத்த சில மாதங்களில் விமானச் சேவைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.வாரத்திற்கு 7 விமானச் சேவைகள் இயக்கப்படும் பெங்களூருக்கு 16 விமானச் சேவைகள் செயல்படும்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய விமானச் சேவைக்கு நிகராக எதிர்வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முழுமையாக மீண்டுவர இலக்கு கொண்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி ஜப்பான்,லாஸ் ஏஞ்சல்ஸ்,பாரிஸ்,வான்கூவர் போன்ற பகுதிகளுக்கும் விமானச் சேவைகளை அதிகரவிமானச் சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளது.டிசம்பர் மாத இறுதிக்குள் கிருமிப் பரவலுக்கு முன்பிருந்த நிலையில் 81 சதவீதத்திற்கு SIA குழுமம் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.