சிங்கப்பூரில் அதிகம் மோசடி செய்யப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் – மோசடி எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

சிங்கப்பூரில் அதிகமான வெளிநாட்டவர்கள் மோசடி சம்பவங்களில் சிக்கி அதற்கு பலியாகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் S$40.4 மில்லியன் இருந்த மோசடி இழப்பு தொகை, 2021ஆம் ஆண்டில் S$88 மில்லியன் என இரட்டிப்பானதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புங்கோலில் வாள் வீசி பொதுமக்களை அலறடித்த ஆடவர் – கடைசியில் நடந்த ட்விஸ்ட்

2020ல் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 3,431 ஆக இருந்தது, அது 2021ல் 5,210 ஆக அதிகரித்தது.

2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டினரைப் பாதித்த முதல் மூன்று மோசடிகள் குறுஞ்செய்தி மோசடிகள், வேலை மோசடிகள் மற்றும் இ-காமர்ஸ் மோசடிகள் என்று போலீஸ் கூறியது.

வேலை தொடர்பான மோசடிகளில் வெளிநாட்டு ஊழியர்கள் சிக்கி தங்கள் பணத்தை இழப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் வழியாக வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி வெளிநாட்டு ஊழியர்கள் முன்பணம் செலுத்தி பின்னர் அதில் அவர்கள் மோசடி செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்த சிங்கப்பூர் Yahoo நிறுவனம்