எல்லைப்பகுதியின் தளர்வுகளால் சிங்கப்பூரில் அதிக வீடுகள் வாடகைக்கு தேவை!

Photo: stacked homes

கோவிட்-19 தொற்றுப் பரவலால், நாட்டின் எல்லைப்பகுதிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, வரும் பயணிகளுக்கு பல தடைகளும் அமல்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வருவதால் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் புதிதாக 2,396 பேருக்கு நோய்த்தொற்று உறுதி!

அதன்படி தற்போது சிங்கப்பூரின் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், நாட்டிற்குள் வரும் பயணிகள் தனிமைப்படுத்தபடுவதற்கும், தங்குவதற்கும் வீடுகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

இதனால் தற்போது சிங்கப்பூரில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகளுக்காக எல்லைப் பகுதிகளில் சிறப்பு நுழைவுப் பாதை சிங்கப்பூர் அமைத்துள்ளது.

இப்புதிய சிறப்புப் பாதை இன்னும் பல நாடுகளுக்கு தொடர்ச்சியாக்கப் பட்டுள்ளது. இந்த புதிய சிறப்பு பாதைகளினால், நாளுக்கு நாள் சிங்கப்பூருக்குள் வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் சிங்கப்பூரில் பலர் தனியார் அடுக்குமாடி வீடுகளை வாடகைக்கு எடுக்க ஆரம்பித்துள்ளனர். சில குறிப்பிட்ட மாத காலம் வரை, சில பயணிகள் வீட்டை லீஸ் முறையிலும் எடுத்து வருகின்றனர்.

இதனால் கடந்த செப்டம்பர் மாதம் வரை 0.7% விழுக்காடாக இருந்த வீடுகளுக்கான மாத வாடகை தற்போது 1.3% விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இணையத்தள புள்ளி விவரங்கள் தெரியப்படுத்துகிறது.

செப்டம்பர் மாதத்தில் 1619 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது ஏறக்குறைய 1750 மேலாக உயர்ந்துள்ளது. ஆனால் 2013ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்த வீடுகளுக்கான மாத வாடகை 9.1% விழுக்காட்டின் அதிகரிப்பை விட தற்போது சற்றே குறைவு தான்.

இதுவரை வீடுகளுக்கான மாத வாடகை பொறுத்த வரை தொடர்ந்து 16வது மாத வாடகையை விட தற்போது அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் உணவகங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவு உண்ண அனுமதி!