சிங்கப்பூரில் அதிக ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் முக்கிய நிறுவனம் – “போதிய வருவாய் இல்லை” என இந்த முடிவு

Pic: File/Today

மின்னணு வணிக நிறுவனமான Shopee  அதிகமானோரை வேலையில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வருவாய் இழப்பு காரணமாக அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறை தண்டனை விதிப்பு

இன்று செப்.20 ஆம் தேதி காலை, டவுன்ஹால்களில் ஊழியர்கள் ஆட்குறைப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.

ஆட்குறைப்பு பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த Shopee யின் செய்தித் தொடர்பாளர், “எங்கள் வர்த்தகம் முழு தன்னிறைவை அடைய மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் உள்ளன” என்றார்.

“இந்த ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்ட எங்கள் நிறுவன ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த இருவர்… பாஸ்போர்ட் தர மறுப்பு – ஏன் இந்த வேலை?