வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்

More retrenchments in Singapore

சிங்கப்பூரில் வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய அவர், தொழில்நுட்பத் துறையில் இந்த ஆட்குறைப்பு நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பத் துறையில் கடந்த ஜூலை முதல் நவம்பர் நடுப்பகுதி வரை சுமார் 1,270 உள்ளூர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் டான் இன்று (நவம்பர் 28) தெரிவித்தார்.

அவர்களில், 10ல் எட்டு பேர் விற்பனை, விளம்பரம் மற்றும் பெருநிறுவன செயல்பாடுகள் போன்ற தொழில்நுட்பம் அல்லாத வேலைகளில் பணிபுரிந்தவர்கள்.

இதில் குறிப்பாக சுமார் 10 பேரில் ஏழு பேர் 35 மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்கள் என்று டாக்டர் டான் கூறினார்.

இந்த ஆண்டு சிங்கப்பூரில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர், பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் ஷோபி ஆகியவை அடங்கும்.