மசூதிகளுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பேரீச்சம் பழங்களை வழங்கியது இந்து அறக்கட்டளை வாரியம்!

Photo: Hindu Endowments Board

ஏப்ரல் 15- ஆம் தேதி சனிக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஐந்து மசூதிகளுக்கு 450 கிலோ கிராம் எடைக் கொண்ட பேரீச்சம் பழங்களை பரிசாக வழங்கியுள்ளது இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board). ஒவ்வொரு மசூதிக்கும் சுமார் 90 கிலோ கிராம் எடைக் கொண்ட பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவை தொழுகைக்காக மசூதிக்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் நடுவானிலே உயிரிழந்த பயணி!

சிங்கப்பூரில் உள்ள பல மத சமுதாயத்தினரிடையே சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்து அறக்கட்டளை வாரியம், ரமலான் நோன்பு இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பேரீச்சம் பழங்களை வழங்கியுள்ளது.

Photo: Hindu Endowments Board

குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டுக்கு சென்ற புதுக்கோட்டை இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

ஏப்ரல் 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மனிதவள அமைச்சகத்தின் உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு குழுவுடன் (Ministry of Manpower’s Assurance, Care and Engagement Group) இந்து அறக்கட்டளை வாரியம் இணைந்து தங்கும் விடுதிகளில் சுமார் 7,500 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மொத்தம் 375 கிலோ கிராம் பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.