சிங்கப்பூரர்களில் மிகவும் போற்றப்படும் மனிதர் “பிரதமர் லீ” – ஆய்வின் தகவல்

(Photo: PM Lee Hsien Loong/ Twitter)

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியென் லூங், கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் முன்னேறி சிங்கப்பூரர்களில் மிகவும் போற்றப்படும் மனிதர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

சிங்கப்பூரர்களில் மிகவும் போற்றப்படும் மனிதர்கள் குறித்த பட்டியலை YouGov ஆய்வு மூலம் தெரிவித்துள்ளது.

உடல் நசுங்கி உயிரிழந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு 3 குழந்தைகள் – உதவும் உள்ளங்கள் முன்வரலாம்!

YouGov என்பது லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சி தரவு மற்றும் பகுப்பாய்வுக் குழு ஆகும்.

இந்தப் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

பெண்களில், மிச்செல் ஒபாமா முதலிடத்திலும், இரண்டாம் இடத்தை எலிசபெத் மகாராணியும், ஆங் சான் சூகியும் அடுத்த இடத்தையும் பிடித்துள்ளனர்.

விதிகளை மீறிய 22 உணவு-பான கடைகளை மூட உத்தரவு!