அணு அணுவாக பெற்ற தாய் தந்தையரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட சிறுவன் பலி – என்ன தண்டனை கொடுக்கலாம் ?

murdered and scalded child

மே 2015 இல் பெற்றோரான அஸ்லின் அருஜுனா மற்றும் ரிட்சுவான் மெகா அப்துல் ரஹ்மான் ஆகியோரின் பராமரிப்பில் இருந்த சிறுவன் மூன்று மாதத்திற்கு கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளான்.

குழந்தையை சூடான கரண்டியால் சுட்டது, இடுக்கியால் கிள்ளியது, முகத்தில் குத்தியது, சுவரில் முட்ட வைதுள்ளது, விளக்குமாறு மற்றும் ஹேங்கர் போன்ற கருவிகளால் தாக்கியது என உடல்ரீதியாக அச்சிறுவனை கொடுமைப் படுத்தியுள்ளது நீதிமன்ற ஆவணங்களின்படி தெரியவந்துள்ளது. மேலும்  அத்தம்பதியினரின் செல்லப் பூனைக்காக வைக்கப்பட்ட கூண்டிலும் பூட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் உணவு நேரத்தில் மட்டுமே வெளியே விடப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 1.05 மீ உயரத்தில் இருந்த சிறுவனை 0.91 மீ நீளம், 0.58 மீ அகலம் மற்றும் 0.70 மீ உயரம் உள்ள கூண்டில் அடைத்தது பெருந்துயர் ஆகும்.

அக்டோபர் 15 முதல் 22, 2016 வரை ஒரு வார இடைவெளியில், சூடான வெந்நீரை சிறுவன் மீது நான்கு முறை தெளித்துள்ளனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, முதல் மற்றும் மூன்றாவது  முறை அஸ்லின் சிறுவன் மீது வெந்நீரைத் தெளித்தார், அதே சமயம் ரிட்சுவான் இரண்டாவது மற்றும் நான்காவது முறை சிறுவன் மீது தெளித்தார்.

நான்காவது முறை தெளித்த பொது அடையாளம் காண முடியாத நிலைக்கு 2016 அக்., 22ல் அச்சிறுவன் சென்றுள்ளான். அந்த பெற்றோர் கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சத்தால், ஏழு மணி நேரத்திற்குப் பிறகு அச்சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர், அக்.23, 2016 அன்று சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவத்தை சிங்கப்பூரில் நடந்த குழந்தை கொடுமைகளில் மிக மோசமான நிகழ்வு இது என்று வழக்கறிஞர்கள் விவரித்துள்ளனர்.

ஜூலை 12, 2022 அன்று அஸ்லின் மற்றும் ரிட்சுவானின் 2020 தண்டனையை திருத்துமாறு மேல்முறையீடு செய்தனர் வழக்கறிஞர்கள். அஸ்லினின் தண்டனை மற்றும் ரிதுவானின் தண்டனையான 24 பிரம்படிகள்  நீடிக்க வேண்டுமா என்பது குறித்து மேலும் சமர்பிப்பதற்காக விசாரணை பிற்பட்ட தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொலைக் குற்றத்திற்காக, அஸ்லின் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.