டாக்சி பின்புறத்தில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் – ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்பு !

motorcyclist in taxi

ஜூலை 17 அன்று ஒரு விபத்திற்குப் பிறகு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை டாக்ஸியின் பின்புறத்தில் இருந்து வெளியேற்ற வேண்டியிருந்தது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பரவியது. 20 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் டாக்சியுடன் மோதியதில் காற்றில் தூக்கி வீசப்பட்டு, பின்னர் டாக்ஸியின் மேல் விழுந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் டாக்ஸியின் பின்புறத்தில் சிக்கி, தலை மற்றும் கால்கள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை அந்த கானொளியில் காணலாம். இதில் டாக்சியின் பின்புற கண்ணாடி நொறுங்கியது. அவரை விடுவிக்க 30 நிமிடங்கள் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த கானொளியில் SCDF பணியாளர்கள் ஓட்டுநரைச் சுற்றியிருப்பதை காணலாம். சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஜூலை 17 இரவு 10.55 மணியளவில் விபத்து குறித்து தாங்கள் எச்சரிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இச்சம்பவம் புக்கிட் பாடோக் கிழக்கு அவென்யூ 3 மற்றும் புக்கிட் பாடோக் கிழக்கு அவென்யூ 6 சந்திப்பில் நடந்துள்ளது.

டாக்ஸியின் பின்புறத்தில் சிக்கியவரை ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.