சாலைத் தடைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகரிக்கும் சிறைத்தண்டனை, அபராதம்

என் அப்பா விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்
SPF

சாலைத் தடைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

காவல்துறை சட்டத்திற்கான திருத்தங்கள் கடந்த ஆகஸ்ட் 3 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஆன்லைன் தளத்தில் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்து பகிர்ந்த ஆடவர் கைது

மேலும், இந்த திருத்தங்கள் சிங்கப்பூர் காவல் படையின் (SPF) செயல் திறன்களையும், தயார்நிலையையும் மேம்படுத்தும் என்று உள்துறை அமைச்சகம் (MHA) இன்று (டிச. 30) தெரிவித்துள்ளது.

அவை சிங்கப்பூர் காவல் படையின் ஒழுங்குமுறை, நிர்வாக மற்றும் மனித வள செயல்முறைகளை வலுப்படுத்தும் எனவும் MHA கூறியது.

வரும் ஜனவரி 1, 2022 முதல், சாலைத் தடைகளைத் மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் அதிகரிக்கப்படும்.

சாலைத் தடைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போது அது அதிகபட்ச சிறைத்தண்டனையான 12 மாதங்கள் மற்றும் அதிகபட்ச அபராதமாக S$5,000 ஆக உள்ளது.

முதலாளியிடம் திருடிய பணம், பொருட்களோடு சொந்த நாடு செல்ல இருந்த பணிப்பெண் – கையும்களவுமாக பிடித்த முதலாளி