சிங்கப்பூர்- சீனா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

Photo: Ministry of Communications and Information

சிங்கப்பூர்- சீனா இடையே வருடாந்திர இருதரப்பு ஒத்துழைப்புக்காக கூட்டு கவுன்சிலின் 17- வது கூட்டம் (17th Joint Council for Bilateral Cooperation- ‘JCBC’) நேற்று (29/12/2021) காணொளி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிங்கப்பூர் அரசு சார்பில், துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் (Singapore Deputy Prime Minister Heng Swee Keat), வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மற்ற அமைச்சர்கள் மற்றும் துறைச் சார்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், சீனா அரசு சார்பில் துணை பிரதமர் ஹான் ஜெங் (Chinese Vice Premier Han Zheng) உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

“அனைவருக்கும் நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்”- சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

கொரோனா நோய்த்தொற்றுக்கு மத்தியில் இரண்டாவது ஆண்டாக, இரு நாடுகளிடையேயான உயர்மட்ட கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொருளாதாரம், வர்த்தகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவைக் குறித்து இரு நாடுகளின் துணை பிரதமர்கள், இரு நாட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memoranda Of Understanding- ‘MOU’s) மற்றும் ஒப்பந்தங்கள் (Agreements) கையெழுத்தானது, இந்த ஒப்பந்தங்களில் நிதித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் (Strengthening Cooperation in Finance), வர்த்தகம் (Exchange Of Trade) மற்றும் சுங்கத் தகவல் பரிமாற்றம் (Customs Information), நகர்ப்புற நிர்வாகம் (Urban Governance) மற்றும் திட்டமிடல் (Planning), இயற்கை பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு ஆகிய வகை அடங்கும். இரு நாடுகளிடையே வர்த்தகம் தொடர்பான முக்கியமான சுமார் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

உயர்மட்ட கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் சுவீ கியட், “கடந்த ஆண்டு இரு நாடுகளிடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இது பல ஆண்டுகளாக (சிங்கப்பூர் மற்றும் சீனாவின்) ஒத்துழைப்பின் வலுவான அடித்தளத்தை பிரதிபலித்தது. கொரோனாவுக்கு பிறகு, நாம் ஒரு பொருளாதாரத்தை அதிக நெகிழ்ச்சியுடன் கொண்டிருக்க வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை அதிகம் நம்பியிருக்கும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.

“இந்தோனேசியாவின் படாமில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் இடமாற்றம்”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

எனவே, கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மிகவும் முன்னோக்கி செல்லும் கூறுகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பொருத்தமானதாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும், நம்பகமானதாகவும் இருப்பதற்கு இவையே சிங்கப்பூரின் விளிம்பின் அடையாளங்கள். சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் சுவீ கியட் மற்றும் சீன துணைப் பிரதமர் ஹான் ஜெங் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்ட சீனாவுடனான எங்கள் உச்ச இருதரப்பு ஒத்துழைப்புக்கான 17- வது கூட்டு கவுன்சிலில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

தொழில்துறை நகரங்கள், நிலையான வளர்ச்சி, இணைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் வரை பல தசாப்தங்களாக சீனாவின் முன்னுரிமை மேம்பாட்டுப் பகுதிகளில் சிங்கப்பூர் பங்குதாரராக இருந்து வருகிறது. பரந்த பிராந்தியத்துடன் இணைக்கும். அதே வேளையில், நிதி, தரவு மற்றும் யோசனைகளின் ஓட்டம் இன்னும் முக்கியமானதாக இருக்கும். எதிர்காலத்திற்கு நாம் செல்லும்போது ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தோம். புதுமை, பொது சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் பற்றிய கருத்துக்களையும் நாங்கள் பரிமாறிக்கொண்டோம்.

சிங்கப்பூர் எங்கே? தொட்டுக் காட்டினால் 20 அமெரிக்க டாலர்கள் உடனே உங்க கையில்! கலக்கும் சின்ன தம்பி!

இன்றைய சந்திப்பு பரிமாற்றங்களின் வேகத்தை அதிகரித்தது மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் களஞ்சியத்தை மேம்படுத்தியது. உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வருவதற்கு நமது வலுவான ஒத்துழைப்பு அடித்தளத்தை உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.