சிங்கப்பூரில் புகழ்பெற்ற “Mr and Mrs Mohgan’s” கடையின் உரிமையாளர் “சோமசுந்தரம் மோகன்” காலமானார்

Asia one

சிங்கப்பூரில் புகழ்பெற்ற பிரபல Mr and Mrs Mohgan’s Super Crispy Roti Prata கடையின் உரிமையாளரான சோமசுந்தரம் மோகன் காலமானார்.

அவரின் இறப்பு செய்தி குறித்த தகவல் கடந்த மார்ச் 12ம் தேதி ஃபேஸ்புக்கில் முதலில் வெளியானது. அதில் மோகன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!

அவர் மாரடைப்பு காரணமாக கீழே விழுந்து இறந்தார் என்று மோகனின் கடை அமைந்துள்ள Tin Yeang coffee shop கடையில் உள்ள மற்ற உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் Mothership.sg இடம் தெரிவித்தனர்.

அவரது சரியான வயது குறித்த தகவல் தெரியவில்லை, அவருக்கு 53 அல்லது 56 வயது இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இடத்தில் இயங்கி வந்த மோகனின் கடை, மார்ச் 15 முதல்

மூடப்பட்டுள்ளது.

மோகன் தனது மனைவி திருமதி மோகனுடன் ஸ்டாலை நடத்தி வந்தார்.

வாடிக்கையாளர்களிடம் அன்பாக பாசமாக பழக கூடியவர் மோகன்.

மோகன் உணவக ஊழியர்களில் “பெரிதும் விரும்பத்தக்க நபர்”, அவர் இறந்தது பெரும் வருத்தம் என்று பல வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரவுள்ள மாற்றங்கள் – முழு விவரம்!

சிங்கப்பூர் வரும் “வெளிநாட்டு பயணிகள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை – இன்று முதல் நடைமுறை!