அந்த ஒரு வார்த்தை சொன்னதும் கடுப்பான பெண்… பெண்ணை இப்படி சொல்லலாமா; MRT ரயிலில் நடந்த வாக்குவாதம்

Stomp

MRT ரயிலில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று இரவு ஆணும் பெண்ணும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வைரல் ஆனது.

ரயில் இருக்கைகளை பிடிப்பது தொடர்பான முதலில் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் பின்னர் வயதான பெண் என ஆடவர் கூறியதால் வாக்குவதம் நீடித்தது.

சிங்கப்பூரிலிருந்து வீடியோ கால்! கணவனின் செயல்..?! தமிழகத்தில் உயிரை மாய்த்த மனைவி!

அன்று இரவு 10.37 மணியளவில் வடக்கு-தெற்குக் பாதையில் ஜூரோங் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த சண்டை நடந்ததாக ஸ்டாம்ப் கூறியுள்ளது. இதனை வீடியோவாக எடுத்த ஸ்டாம்ப் வாசகர் அதனை ஸ்டாம்ப் தளத்திற்கும் அனுப்பியுள்ளார்.

ரிஸி என்ற அந்த வாசகர் கூறுகையில்: “ஆடவர் இருக்கையை பிடிக்க விரைந்தார், அப்போது அந்தப் பெண்ணும் அதே இருக்கையில் உட்கார விரும்பினார்.”

இதனால் தொடங்கிய வாக்குவத்தின்போது ஆடவர், அந்த பெண்ணை நோக்கி “பெரிய அக்கா! வீட்டுக்கு போங்க.. உங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்” என்று கூறினார்.

தன்னை பெரியவள் என கூறியதும், அதற்கு அந்த பெண்; “நீங்கள் மிகவும் சிறியவரா? என்னை அவ்வாறு கூப்பிட… கடவுளே” என்றார்.

இவ்வாறு அந்த வாக்குவாதம் நீடித்ததாக வாசகர் ரிஸி கூறியுள்ளார்.

நிலைத்தவறி கடுமையாக தரை இறங்கிய வான்குடை சாகச வீரரின் நிலை என்ன?