“வேற வேலை இல்லையாப்பா”… இரு பயணிகள் இடையே தகராறு – சிங்கப்பூர் வைரல்

mrt-dispute

புவாங்காக் MRT ரயில் நிலையம் நோக்கிய வழியில் சென்று கொண்டிருந்த MRT ரயிலில் பயணித்த இரு பயணிகள் இடையே ஏற்பட்ட தகராறு கேமராவில் பதிவாகியுள்ளது.

சுமார் 1 நிமிடத்திற்கு மேல் நீடித்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் நேற்று (பிப். 28) ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

சொந்த நாட்டுக்கு செல்லவிருந்த அன்றைய தினமே விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!

அதில் அரைக்கால் சட்டை அணிந்த பயணி ஒருவர் மற்றொரு பயணியை அடிப்பது போல பாவனை செய்வதை காண முடிகிறது.

அமர்ந்திருந்த ஆடவர், “நான் போலீசை அழைக்கிறேன்!” என்று சத்தம் போடுவதையும், விரலைக் காட்டி “நான் உனக்கு பயப்படவில்லை” என்று கூறுவதையும் காணமுடிகிறது.

தொடரும் இந்த வாக்குவாதத்தில் தகாத வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. “Mind your f*cking business…I’m a message from a god” என்று நின்று கொண்டிருந்தவர் அமர்ந்திருந்தவரை நோக்கி வசைபாடுவதையும் காண முடிகிறது.

இதில் அமர்ந்திருந்த ஆடவரின் பக்கத்தில் இருந்த பயணியைத் தவிர, யாரும் தலையிடவில்லை.

இது ஒன்றும் புதிதல்ல, இது போன்ற சிலர் அடிக்கடி சிக்குவது வழக்கம் தான்.

பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற பதில்!