புதுசு கண்ணா! புதுசு! – ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு MRT ரயில் நிலையம் அமைக்க திட்டம்!

2040-ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூரின் மொத்த ரயில் கட்டமைப்பும் சுமார் 360 கி.மீ நீளத்துக்கு விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

தற்போது சிங்கப்பூரில் 240 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் கட்டமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.இனிவரும் அடுத்த பத்தாண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் முக்கிய பகுதிகளில் புதிய MRT ரயில் நிலையங்கள் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.

2040ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரர்கள் ஒரு ரயில் நிலையத்தை 10 நிமிடங்களில் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.மேலும் 2040ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் பசுமையான எரிபொருளைப் பயன்படுத்துவது இலக்காகும்.

சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் கார்-பகிர்வுத் திட்டத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை சோதனை செய்யவுள்ளது.மேலும் நிலப் போக்குவரத்துத் துறையில் மின்னியல் தீர்வுகளை ஏற்றுநடத்துவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இனி ரயில் நிலையங்களை சென்றடைய மணிக்கணக்கில் பயணம் செய்யத் தேவையிருக்காது.