சிங்கப்பூரிலிருந்து பார்த்தால் சீனக் கடல் தெரியுமாம்! – அவ்ளோ உச்சியில் கட்டப்படும் வீடு!

SKYCRAPER

வானத்தை தொடுவது போல உலகின் பல்வேறு பகுதிகளிலும் மிகப்பெரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.சிங்கப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மிகப்பெரிய கட்டிடங்களில் செயல்படுகின்றன.இந்நிலையில் சிங்கப்பூரிலேயே மிக உச்சத்தில் இருக்கும் வீடு ஷெண்டன் வே பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.

63 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் உச்சி மாடியில்,305 மீட்டர் உயரத்தில் இந்த வீடு அமைக்கப்படும்.”இவ்வளவு உச்சத்தில் வீடு அமைக்கப்பட்டால் அங்கிருந்து பக்கத்து நாட்டையும் பார்த்து விடலாமே” என்று அனைவரின் மனதில் தோன்றும் எண்ணம்தான்! மாடியின் உச்சியில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட வீட்டிலிருந்து பார்த்தால் தென்சீனக் கடல் தெளிவாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.

எண் 8,ஷெண்டன் வே பகுதியில் கட்டப்படும் இந்த கட்டிடம் சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டிடமாகத் திகழும் என்று கூறப்படுகிறது.கட்டிடத்தின் முழுமையான கட்டுமானப் பணிகள் 2028ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தில் அலுவலகங்கள்,சொகுசு வீடுகள்,கடைகள்,ஹோட்டல்களும் அமைகிறது.தற்போது சிங்கப்பூரின் மிக உயரமான கட்டிடமாக ‘குவாகோ டவுர்’ திகழ்கிறது.இந்த கட்டிடத்தில் 64 மாடிகள் உள்ளன.

இந்தக் கட்டிடம் சுரங்க நடைபாதை வழியாக MRT நிலையத்துடன் இணைக்கப்படும்.மேலும்,கட்டிடத்தில் உள்ள அனைவரும் வெளிப்புறச்சூழலை எளிதாக அனுகும்விதமாக பலத் தளங்களை ஆகாயத் தோட்டத்துடன் இணைக்கும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.