‘மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை’- ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு!

Photo: Air India

கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) கீழ் சிங்கப்பூர், இந்தியா இடையேயான விமான சேவை வரும் நவம்பர் 29- ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, ‘VTL’- திட்டத்தின் கீழ் சிங்கப்பூர், இந்தியா இடையே இரு மார்க்கத்திலும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்க உள்ளன. இந்தியாவில் திருச்சி, சென்னை, கொச்சி, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ அல்லாத விமானங்களும் இயக்கப்படவுள்ளன.

‘VTL’ சிறப்பு பயணத் திட்டம் மேலும் ஆறு நாடுகளுக்கு விரிவாக்கம்!

இந்த விமான சேவைக்கான பயண அட்டவணையை வெளியிட்டுள்ள விமான நிறுவனங்கள், அதற்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளன.

அந்த வகையில், ஏர் இந்தியா நிறுவனம் (Air India) வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி, மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை வரும் நவம்பர் 28- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவையும், வாரத்தில் இரண்டு நாட்கள் மும்பையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையும் வழங்கப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ https://www.airindia.in/  இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!

ஏர் இந்தியா நிறுவனம், மும்பை- டெல்லி- சிங்கப்பூர், மும்பை- சென்னை- சிங்கப்பூர், மும்பை- சிங்கப்பூர், டெல்லி- சிங்கப்பூர், சிங்கப்பூர்- டெல்லி, சிங்கப்பூர்- டெல்லி- மும்பை ஆகிய வழித்தடங்களில் விமானங்களை இயக்கவுள்ளது.

ஏற்கனவே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் (Air India Express) திருச்சி, சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தற்போது விமான சேவையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.