தன் ஓவியத்தின் மூலம் 1970, 1980களில் இருக்கும் சிங்கப்பூரை நினைவூட்டிய ஓவியக்கலைஞர் !

mural artist

53 வயதான சுவரோவியக் கலைஞர் Yip, சிங்கப்பூரின் பழங்கால வாழ்க்கை முறையை மீண்டும் காட்சிப்படுத்தத் தொடங்கியுள்ளார். 1970, 1980களில் இருக்கும் சிங்கப்பூரை சித்தரிக்கும் 60 மீட்டர் நீள ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார், இதற்காக அவர் ஆகஸ்ட் 2021 முதல் பணியாற்றி வந்துள்ளார்.

அவரது சமீபத்திய ஸ்னீக்-பீக்கில், அவர் தனது ஓவியத்தின் 21வது பேனலைக் காட்டினார்.  அதில் HDBயின் வெற்றிடத்தில்  ஒரு இறுதிச் சடங்கு நடைபெறுவது போல் இருந்தது. மேலும்  மக்கள் கூட்டமாக நின்று அஞ்சலி செலுத்துவது, இறுதிச் சடங்கு நடைபெறுவது மற்றும் விருந்தினர்கள் மேஜையில் சீட்டு விளையாடுவது என பல்வேறு நுணுக்கங்களுடன் வரையப்பட்டிருந்தது.

அந்த இறுதிச் சடங்கு நடக்கும் இடத்திற்கு மேலே, சில குடியிருப்பாளர்கள் தங்கள் ஜன்னலுக்கு வெளியே துணிகளை தொங்கவிட்டு உலர வைப்பது போன்றும் வரையப்படிருந்தது. மேலும் அந்த ஓவியத்தில் மணல் குவியலுடன் பழங்கால விளையாட்டு மைதானமும் இடம் பெற்றிருந்தது.

“இறுதிச் சடங்குகளைக் கொண்ட ஓவியத்தை, ஓவியக் கலைஞர்கள் பொதுவாக உருவாக்க மாட்டார்கள், ஏனெனில் மக்கள் அதை வாங்க வாய்ப்பில்லை” என்று அவர் கூறினார். ஆனால் இந்த காட்சியை சிங்கப்பூர் வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக தான் நம்புவதால் அதைச் சேர்த்துள்ளதகவும் அவர் கூறியுள்ளார்.