சிங்கப்பூர் முன்னாள் அதிபர் இறுதிச்சடங்கில் ஒலித்த தேவா பாடல்… மேடையில் நினைவுக்கூர்ந்த நடிகர் ரஜினிகாந்த்!

Video Crop Image

தமிழ் திரையுலகில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் தேனிசைத் தென்றல் தேவா. தனது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அவரது இசைக் கச்சேரி நவம்பர் 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 06.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.

இசைக்கவி ரமணனின் ‘கம்ப தரிசனம்’ என்ற நூலை வெளியிட்ட அமைச்சர் கா.சண்முகம்!

அதேபோல், இசையமைப்பாளர்கள் அனிருத், ஸ்ரீகாந்த் தேவா, நடிகைகள் மீனா, மாளவிகா, திரைப்பட இயக்குநர் வசந்த் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இசை கச்சேரி கோலாகலமாக நடைபெற்றது. இசைக் கச்சேரியின் வீடியோக்கள் “DevaTheDeva” என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

அதில், நடிகர் ரஜினிகாந்த், சிங்கப்பூர் முன்னாள் அதிபர் குறித்து பேசியது தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக இருந்த எஸ்.ஆர்.நாதன் தன்னுடைய இறுதிச் சடங்கின் போது தேவாவின் இசையமைத்த ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” பாடலை ஒலிக்க செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.

Video Crop Image

விரிவடையும் சிங்கப்பூரின் ரயில்வே கட்டமைப்பு! – தொற்றுப் பரவலினால் பணியில் தாமதம் ஏற்பட்டாலும் திட்டமிட்டபடி பணிகள் முடிக்கப்படும்!

அதன்படியே, எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கின் போது, அந்த பாடல் ஒலிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை தேவாவின் இசைக் கச்சேரியில் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் நினைவுக்கூர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச் சடங்கு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “தஞ்சாவூரு மண்ணு எடுத்து” என்ற பாடல் ஒலிக்கப்பட்டிருந்தது.