வேலை அனுமதி காலாவதியாகும் வெளிநாட்டு ஊழியர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முஸ்தஃபா சென்டர்..!

Mustafa Centre to send back foreign workers whose work passes expire
(PHOTO: Mustafa Centre)

COVID-19 தொற்று காரணமாக வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை அனுமதி காலாவதியாகும் வெளிநாட்டு ஊழியர்களை, முஸ்தபா சென்டர் சொந்த நாட்டுக்கு அனுப்பவுள்ளது.

இதுகுறித்து, முஸ்தஃபா சென்டரின் பணிபுரியும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், அந்த குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான திரு முஸ்தாக் அகமது அதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அப்டேட்..!

அந்நிறுவனம் வேலைக்கு அழைக்கப்படாத ஊழியர்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு 300 வெள்ளி வழங்கிவந்தது, வரும் அக்டோபர் முதல் அந்தச் சலுகையையும் நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், வருமானம் ஈட்ட இரண்டாவது வேலையை மேற்கொள்ளுமாறு இந்த ஊழியர்களை அது வலியுறுத்தியுள்ளது.

தனது வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதியை புதுப்பிக்க முடியவில்லை என்றும், அவர்கள் வீடு திரும்புவதற்கான டிக்கெட்டு கட்டணத்தை அது செலுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிருமித்தொற்று காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைவான நேரம், பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகள் போன்றவற்றால் அனைத்து ஊழியர்களையும் வேலைக்குத் திரும்ப அழைக்க முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்று திரு முஸ்தாக் ஆகஸ்ட் 27 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வருந்துவதாகவும், வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை அறிய முஸ்தபா குழுவை Straits times தொடர்பு கொண்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் லிட்டில் இந்தியாவில் கடைகள் பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg