‘MWC’ ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்பு!

Migrant workers vital to Singapore economy
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் (Migrant Workers’ Centre) ஏற்பாடு செய்திருந்த தீபாவளி கொண்டாட்டங்கள், கடந்த அக்டோபர் 30- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தீபாவளி கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு நடைபெற்றதால் சுமார் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) கலந்துக் கொண்டனர்.

புதிதாக திறக்கப்பட்ட தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ரயில் நிலையங்கள் – அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதனை மேடைக்கு கீழே அமர்ந்திருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். சில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மேடைக்கு சென்று பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Photo: MWC Official Facebook Page

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும், பிரியாணி மற்றும் தீபாவளி தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.

சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: MWC Official Facebook Page

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும், தங்கள் துன்பங்களை மறந்து, இன்ப முகத்துடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.