நாசா பயிற்று மொழியாக தமிழ் மொழி தேர்வு !

NASA agreed to include Tamil as instructive language ( Photo : NASA)

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது தமிழர் ஒருவர் கோரிக்கை ஒன்று வைத்தார். அதில் நாசாவில் தமிழ் பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளப்படுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு நாசா கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

பழனியை சேர்ந்த தேன் தமிழன் என்பவர் நாசாவிற்கு அனுப்பிய தமிழ் மொழி குறித்த விவரங்களையும், தமிழ் மக்களை குறித்து கட்டுரைகளையும் கண்டு நாசா விஞ்ஞானிகள் வியந்தனர். இதை கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

பல தமிழறிஞர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது தமிழ் மொழியை பயிற்று மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விஞ்ஞானி உமா ராமச்சந்திரன் கூறுகையில், இந்திய மொழிகளில் அதிகம் பேசப்படும் தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இதற்கு நாசா அங்கீகாரம் அளித்தது பெருமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது நாசாவில் அரபி, ஆங்கிலம் பிரெஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் பயிற்று மொழியாக உள்ளன. அந்த வரிசையில் தமிழ் மொழி இணைந்துள்ளது, உலக பெருமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்புதலை பலரும் பாராட்டி வரும் சூழ்நிலையில் சென்னை கிறித்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் சுரேஷ் தாஸ் அவர்கள் கூறுகையில், ‘நாசாவில் மற்றொரு மொழி சேர்க்கப்பட்டதற்கான தேவை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்தும் ஆங்கிலத்தில் செயல்படுகிறது, இதனால் இந்திய மொழி உள்ளிட்ட எந்த நாட்டு மொழியை தேர்வு செய்தாலும் பயன் ஒன்றும் இல்லை. இதனால் எந்தவித நன்மையும் உண்டாகப் போவதில்லை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.