சிங்கப்பூரின் 58வது தேசிய தினம்: களைகட்ட போகும் கொண்டாட்டங்கள்… 5 முக்கிய இடங்கள் – விளையாட்டும் உண்டு

National Day celebrations 2023 Singapore
(Photo: Singapore Motherhood)

சிங்கப்பூரின் 58வது தேசிய தினத்தை முன்னிட்டு ஆக. 5 மற்றும் ஆக.6 ஆகிய நாட்களில் ஐந்து முக்கிய இடங்களில் சமூக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதிகமான சிங்கப்பூரர்கள் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் போலீசிடம் வம்பு, ஆயுதத் தாக்கில் பங்கு.. குற்றத்தை ஒப்புக்கொண்ட ஊழியர்

இந்த ஆண்டு இடம்பெறும் கொண்டாட்டங்களில் விளையாட்டு மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை வரிசையாக இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ActiveSG Bedok Sport Centre, ActiveSG Jurong West Sport Centre, ActiveSG Toa Payoh Sport Centre, ActiveSG Woodlands Sport Centre and Our Tampines Hub ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதாவது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும், Our Tampines Hub இல் ஆகஸ்ட் 6 அன்று மட்டுமே நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் விளையாட்டுகளையும், மேலும் வில்வித்தை, ஸ்கேட்போர்டிங், ரோலர் ஸ்கேட்டிங் போன்றவற்றையும் விளையாடிப் பார்க்கலாம்.

இன்று புதன்கிழமை நண்பகல் முதல் டிக்கெட்டுகள் பற்றிய விவரங்கள் NDP இணையதளத்தில் வெளியாகும்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கால்வாயில் விழுந்த கார்… சிக்கி தவித்த இருவரை உடனடியாக குதித்து மீட்ட வெளிநாட்டு ஊழியர் – குவியும் நன்றிகள்