தேசிய தின கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு ஊழியர்கள்!

Pics: AGWO

மெய்நிகர் தேசிய தின கலாசார நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களும், பணிப்பெண்களும் பங்கேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

(AGWO) வெளிநாட்டு ஊழியர் தொடர்புக் கூட்டணி அமைச்சு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து நடத்திய தேசிய தின கலாசார நிகழ்ச்சியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், நடனங்களும் நடைப்பெற்றன.

மேலும், இந்நிகழ்ச்சி அமைப்பின் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கிலும் நேரடியாக ஒளிப்பரப்பானது.

இந்நிகழ்ச்சியின் மூலம் தொற்றுநோய் பரவலினால் ஊழியர்களின் மகிழ்ச்சியான மனநிலையும், அவர்களின் சுற்றுவட்டார நண்பர்களுடன் சேர்ந்து செலவிடும் நேரமும் குறைந்துள்ளதால், இந்நிகழ்ச்சி அவர்களுக்கு உற்சாகத்தையும், ஒருவித மன எழுச்சியையும் கொடுத்திருக்கும் என கூட்டணி அமைப்புகளில் ஒன்றான ஹோப் திட்டத்தைச் சேர்ந்த ரெவரண்ட் எஸக்கியல் டான் தெரிவித்தார்.