அணிவகுப்பில் பிணைக்கைதிகளை மீட்கும் ஒத்திகை காட்சி – முதல்முறையாக தீயணைப்பு வாகனங்கள் பங்கெடுக்கின்றன

National Day Ceremonial Parade
Pic: NDPeeps

இந்தாண்டு சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பில் ,பேருந்திலிருந்து கடத்தப்பட்ட பிணைக்கைதிகளாக இருப்போரை மீட்டெடுக்கும் ஒத்திகைப் பயிற்சியை முதல் முறையாக செய்து காண்பிக்க உள்ளனர்.பிணைக்கைதிகளை பேருந்தின் சன்னல்களை உடைத்து காப்பாற்றுவதைப் பார்வையாளர்கள் நேரடியாகக் காணமுடியும்.2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முழுமைத் தற்காப்புக் காட்சி இந்தாண்டு மீண்டும் அரங்கேற்றப்படுகிறது.

மரினா பே-இன் மிதக்கும் மேடையில் கடற்படையின் முக்குளிப்பு பிரிவைச் சேர்ந்தவர்களும்,ராணுவப் படையினரும் மற்றும் பீரங்கி வண்டிகளும் ஊர்வலமாகச் செல்லவிருக்கின்றனர்.சிங்கப்பூர் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் 50-க்கும் மேற்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப் படுகின்றன.2000-க்கும் மேற்பட்டோர் இந்தக் காட்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.

தேசிய தின அணிவகுப்பில் ,சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் “Red Rino” தீயணைப்பு வாகனம்,காவல்துறையினரின் மோட்டார் பைக்குகள்,ராணுவ வீரர்கள் பங்களிக்கின்றனர்,அணிவகுப்பில் நேரடியாக கலந்துகொள்பவர்கள் மட்டுமல்லாமல் காணொளி வாயிலாக பாடகர் குழு போன்ற வெவ்வேறு குழுக்கள் கலந்துகொள்ளும்.55-ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

மரினா பே மிதக்கும் மேடையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ,தேசிய தின அணிவகுப்பு குறித்த விவரங்களை ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டனர்.கோவிட்-19 தொற்றுக்கு முன்பு நடந்த அணிவகுப்பை இலக்கு வைத்து ,கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.