காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஸ்மார்ட் பேண்டேஜைக் கண்டுபிடித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்!

Photo: National University Of Singapore

சிங்கப்பூரில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (National University Of Singapore). இந்த பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். குறிப்பாக, ஆராய்ச்சி படிப்புகளுக்கு இந்த பல்கலைக்கழகம் சிறந்தது என்பதால், இந்தியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு அதிகளவில் பயின்று வருகின்றனர்.

சிங்கப்பூர் to திருச்சி வந்த 140 பேர்: “வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது” – கண்காணிக்கும் அதிகாரிகள்

மேலும், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, காயங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும், ஸ்மார்ட் பேண்டேஜை (Smart Bandage) சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிவியல் ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா உறுதி!

இக்குழு வடிவமைத்துள்ள ஸ்மார்ட் பேண்டேஜில் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார் ஆனது உடல் வெப்ப நிலை, காயத்தின் தற்போதைய தன்மை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு, செயலிக்கு அனுப்பிவிடும். மருத்துவர்கள் இந்த செயலியின் வாயிலாக தகவல்களை அறிந்துக் கொண்டு மருந்துகளை வழங்குவர். காயமடைந்தவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களைக் கண்காணிக்க, இது உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன.