“நாம் காண விரும்பும் சிங்கப்பூரை உருவாக்க சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம்” – தேசிய தினப் பேரணியில் பிரதமர் லீயின் உரை

Photo: Prime Minister of Singapore Official Facebook Page
தேசிய தினப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லீ சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பது அவசியம் என்றும் இனம்,மதம்,சமூக வேற்றுமைகள்,பிறப்பிடம் போன்றவை நம்மைப் பிளவுபடுத்தி விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இது பிரதமர் லீயின் 17-வது தேசியதினப் பேரணி உரையாகும்.கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் சூழலில் அனைத்து இடையூறுகளையும் எதிர்கொள்ள ஒன்றிணைந்த சமூகமாக இருப்பது அவசியம் என்பதை உரையின் முக்கியக் கருத்தாக வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து பேசினார்.சிங்கப்பூர் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை படைக்க நான்காம் தலைமுறைத் தலைமைத்துவம் தயாராக இருப்பதாக அரசியலில் சேவையாற்றும் இளைஞர்களை குறிப்பிட்டார்.

ஒவ்வொரு சிங்கப்பூரரின் கனவு மெய்ப்படவும் நாம் காணத் துடிக்கும் எதிர்கால சிங்கப்பூரை உருவாக்க ஒருமித்த முடிவை எடுக்கவும் ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.